விநாயகரும் அரசியலும்
இந்தியாவில் இரண்டு விழாக்கள் இந்துக்களால் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது உண்ட அதில் ஒன்று தீபாவளி இன்னொன்று விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியை முதல் முதலில் கொண்டாடியவர் மராட்டிய அரசர் சத்ரபதி வீரசிவாஜி ஆவார் இவரது ஆட்சிக்காலத்தில் தான் மராட்டியர்கள் தங்கள் வீடுகளில் தேசிய விழாவாக கொண்டாடினார்கள் மன்னர் சிவாஜியின் மறைவுக்கு பிறகு பீஷ்வாக்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தது விநாயகர் பிஷ்வாக்களின் குலத்தெய்வம் என்றும் கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து விநாயகரை முதன் முதலில் அரசியலுக்கு அழைத்து வந்தார் ஒருவர் அவர்தான் இந்திய தேசியத்தின் மீதும் இந்து மதத்தின் மீதும் தீவிர பற்று கொண்ட சுதந்திர போராட்ட வீரர் தியாகசீலர் பாலகங்காதரதிலக் எனும் திலகர் ஆவார் சாதிகளைக் கடந்து இந்திய மக்களை எப்படியாவது ஒன்றுதிரட்டி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை இந்தியாவில் இருந்து அகற்றி சுதந்திரம் அடைய செய்ய பொது மற்றும் முதற்கடவுளான விநாயகரை கையில் எடுத்தார் திலகர். அப்போது உலகம் முழுக்கக் பரவிய பிளாக் நோய் இந்தியாவிலும் பரவி பல்வேறு உயிரிழப்புக்கள...