விநாயகரும் அரசியலும்


  இந்தியாவில் இரண்டு விழாக்கள் இந்துக்களால் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது உண்ட அதில் ஒன்று தீபாவளி இன்னொன்று விநாயகர் சதுர்த்தி

  

  விநாயகர் சதுர்த்தியை முதல் முதலில் கொண்டாடியவர் மராட்டிய அரசர் சத்ரபதி வீரசிவாஜி ஆவார் இவரது ஆட்சிக்காலத்தில் தான் மராட்டியர்கள் 
தங்கள் வீடுகளில் தேசிய விழாவாக கொண்டாடினார்கள் மன்னர் சிவாஜியின் மறைவுக்கு பிறகு பீஷ்வாக்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தது  விநாயகர் பிஷ்வாக்களின் குலத்தெய்வம் என்றும் கூறப்படுகிறது  

  இதனைத் தொடர்ந்து விநாயகரை முதன் முதலில் அரசியலுக்கு அழைத்து வந்தார் ஒருவர் அவர்தான் இந்திய தேசியத்தின் மீதும் இந்து மதத்தின் மீதும் தீவிர பற்று கொண்ட சுதந்திர போராட்ட வீரர் தியாகசீலர் பாலகங்காதரதிலக் எனும் திலகர் ஆவார் சாதிகளைக் கடந்து இந்திய மக்களை எப்படியாவது ஒன்றுதிரட்டி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை இந்தியாவில் இருந்து அகற்றி சுதந்திரம் அடைய செய்ய பொது மற்றும் முதற்கடவுளான விநாயகரை கையில் எடுத்தார் திலகர்.

 அப்போது உலகம் முழுக்கக் பரவிய பிளாக் நோய்  இந்தியாவிலும் பரவி பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்படுத்தியது மராட்டியத்திலும் நோய்கள் பரவி மக்கள் உயிரிழந்தார்கள் இதனால் எலிகளை கொன்று வருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என ஆங்கிலேய அரசு அறிவித்தது இதனை அறிந்த திலகர் எலிகள் விநாயகரின் வாகனம் அதனை கொள்வது அநீதி சதி எனக் கூறி மராட்ட மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார் பிறகு ஆங்கில அரசால் தனது அறிக்கை திரும்பப் பெறப்பட்டது விநாயகரை வைத்து அரசியல் செய்து திலகர் வெற்றியும் பெற்றார்

  விநாயகர் சதுர்த்தி இதன்பிறகு மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் இந்துக்கள் அனைவராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது பிறகு பத்திரிகையாளரும் சிவசேனை அமைப்பை உருவாக்கியவரும் ஆன பால்தாக்கரே.  கணபதி பப்பா மோரியா என்னும் கோஷத்தை எழுப்பி மகாராஷ்டிராவின் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக விநாயகரை வீதிக்கு அழைத்து பெரும் ஊர்வலங்களை நடத்தத் தொடங்கினார் இந்து மதத்தின் பாதுகாவலர் என தன்னை முன்னிறுத்தி ஆட்சியாளர்களாலும் சட்டத்தாலும் அசைக்க முடியாத தலைவராக விளங்கினார்  பால் தாக்கரே தொடர்ந்து நாடு முழுக்க விநாயகரை இந்து மகாசபை ஆர்எஸ்எஸ் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பல்வேறு இந்துத்துவ அமைப்புகளும் காங்கிரஸ் பாஜக போன்ற தேசிய கட்சிகளும் சில மாநில கட்சிகளும் பாகுபாடுயின்றி நாடு முழுக்க ஊர்வலமும் யாத்திரையும் நடத்தத் தொடங்கினார்கள் இதன் பிறகு இந்திய 
அரசியலில் விநாயகர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் என்பதே நிதர்சனம்

விநாயகர் திலகரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு சாதிகளை கடந்து இந்தியர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டவும் சுதந்திரம் பெறவும் பயன்படுத்தப்பட்டார் என்பதும் வரலாறு பிறகு சுதந்திர இந்தியாவில் ஜாதிய மோதல்களும் மதக் கலவரங்களும் நிகழ்வதற்கான காரணமாகிவிட்டார் என்பதும் மறுக்க இயலாத கடந்த கால உண்மை எது எப்படியோ வீதிகளில் அரசியல்வாதிகளால் கொண்டாடப்பட்டும்  விநாயகர் வினை செய்தும் வினை தீர்த்தும் வருகிறார்  என்பதே வரலாறு

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே