Posts

Showing posts from February, 2023

அதானி குழுமத்தில் முதலீடு செய்து எல்.ஐ.சி நிறுவனமானது தனது முதலீட்டு இழந்ததா

Image
அதானி குழுமத்தில் முதலீடு செய்து எல்.ஐ.சி நிறுவனமானது தனது முதலீட்டு இழந்ததா என்றால் இல்லை என்பதே பதிலாகும்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எல்ஐசி நிறுவனமானது அதானி குழுமத்தில் 30தாயிரத்தி 127 கோடி ரூபாய் முதலீடு செய்தது அதானி குழும பங்குகளின் அசுர வேகத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடும் அதிக அளவு லாபத்தை ஈட்டியது  அதாவது ரூபாய் 30127 கோடி ரூபாய் முதலீடு ஆனது 72000 கோடி அளவுக்கு உயர்ந்தது எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்த தொகையை விட இரண்டு மடங்கு உயர்ந்தது  ஆனால் சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க்  ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேடு செய்திருப்பதை சுட்டி காட்டியது இதனால் அதானி குழும பங்குகள் சந்தையில் சருக்களை சந்தித்தது அதில் எல்.ஐ.சி முதலீடு செய்திருந்த முதலீடும் சரிவை சந்தித்தது  நேற்றைய நிலவரப்படி எல்.ஐ.சி நிறுவனம்  56000 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தகத்தை நிறைவு செய்தது இப்பொழுதும் எல்.ஐ.சி நிறுவனம் செய்த முதலீடு லாபத்தில்  தான் உள்ளது #LIC #AdaniGroup

மேத்தா 90களில் செய்த பங்குச்சந்தை ஊழலை தான்

Image
ஹர்ஷத் மேத்தா 90களில் செய்த பங்குச்சந்தை ஊழலை தான் இப்போது 2020 தொடக்கத்தில்  அதானி  நிறுவனம் செய்துள்ளது  மேத்தாவும் அதானியும் செய்த ஊழலுக்கு பெரிய வேறுபாடு எல்லாம் இல்லை மேத்தா சந்தையில் பட்டியலிடப்பட்ட சிறு நிறுவன பங்கை தேர்வுசெய்து அதில் அதிகமான முதலீடு செய்து  செயற்கையாக அந்தப் பங்கினை சந்தையில் விலை உயரச் செய்வார்  அதே வேலையைதான் அதானியும் கொஞ்சம் நுணுக்கமாக தன் நிறுவன பங்குகளில் வேறு பல நிறுவனங்கள் முதலீடு செய்வது போல் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தன் நிறுவன பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக சந்தையில் விலை ஏற செய்துள்ளார்