தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் வெல்லப் போவது யார் ?
தஞ்சாவூர் தொகுதி ஆனது திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு மிகுந்த தொகுதியாகும்
தஞ்சாவூர் தொகுதியில் I.N.D.I.A சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
இந்த மக்களவைத் தொகுதியில் மன்னார்குடி திருவையாறு தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன இவைகளில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தவிர்த்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஒருங்கிணைந்த அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொகுதியில் திமுகவிற்கு 25 முதல் 35 சதவீதம் வரை நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது
இதுவரை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 7 முறையும் அதிமுக 2 முறையும் களத்தில் நேரடியாக போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளது
மற்றும் காங்கிரஸ் ஆனது 3 முறை நேரடியாகவும் 3 முறை அதிமுகவுடனும் மற்றும் ஒரு முறை திமுகவுடனும் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளது
இந்த முறை 2வது இடத்திற்கு NDA கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது
மூன்றாவது இடத்திற்கு அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அல்லது நாம் தமிழர் வேட்பாளர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது

Comments
Post a Comment