Posts

Showing posts from April, 2020

சந்தில் சிந்து பாடும் மடத்தந்தியே தினத்தந்தியே

Image
அடிமையே அண்ணாவின் அறிவாற்றல் தெரியுமா எருமையே அண்ணாவின் எழுத்தாற்றல் தெரியுமா ஆரியத்தின் கால்நக்கி பிழைத்து தினம் தினம் தமிழர்கள் போடும் பிச்சையில் செழித்து கொழுத்து தமிழினத் தலைவரை அவதூறு செய்வதா சந்தில் சிந்து பாடும் மடத்தந்தியே தினத்தந்தியே உங்கள் தலைவர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் வரலாற்றை புரட்டுங்கள் அதிலும் மாமேதை அண்ணாவின் புகழ் ஒளிரும்

வாய்மை வென்றிடவே

Image
நாளும்  பொய்யுரைக்கும் வஞ்சக கூட்டதை கற்றல் அறிவோடு திசையெங்கும் கூர்நோக்கி மெய்யினை கண்டபின் வாய்மையின் வாதத்தால் வஞ்சக கோட்டை தகர்த்து பொய்யுரை கூட்டத்தாரையும் வென்று எந்நாளும் மக்கள் மன்றத்தில் மெய்யாய் உரைத்திடவே எந்நாளும் நல்வாய்மை வென்றிடவே  

அன்பு யாதெனில்

Image
துன்பத்தில் வாடிய உயிர்களை கண்டபின்  அத்துன்பம் தன்துன்பம் என உணர்ந்து  அத்துன்பத்தில் பங்கு கொண்டு  துன்பம் காலத்தால் நீங்கி  பொழியும் இன்பத்தினை பிறரோடு  மகிழ்வோடு பகிர்ந்து வாழ்வதே அன்பாகும்

அழகிரிசாமி அவர்களின் புகழ் வாழ்கவே

Image
சாதியத்தின் இருள்நீக்கி சமூகநீதி ஒளிபாய்ச்சி தன்மான தமிழ்மொழியில் பகுத்தறிவு பேசி பெரியாரையும் அண்ணாவையும் கவர்ந்தது பெரும் தமிழரையும் கவர்ந்து எங்களையும் கவர்ந்து தமிழரைத் தலை நிமிரச்செய்த பெருந்தமிழர் பட்டுக்கொட்டை அஞ்சா நெஞ்சா அழகிரிசாமி அவர்களின் புகழ் வாழ்கவே

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகழ் வாழ்கவே

Image
அறிவுலகம் அறிந்து புத்தம் உணர்ந்தது சட்டமும் பொருளாதாரமும் பயின்று தான் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கலைத்து பெண்ணுக்குச் சமயுரிமை அளித்து தன் வாழ்வினை தொண்டுக்கு அர்ப்பணித்த இந்திய தேசத்தின் இன்னொரு தந்தை இந்திய பொருளாதாரத்தின் தந்தை சட்டத்தின் மேதை அறிவுச் சுடர்ரொளி தன்மானத் தலைவர் எழுச்சியின் அறிமுகம் புரட்சியின் தத்துவம் அடக்கத்தின் அடைமொழி மனிதத்தின் அடையாளம் புத்தரின் பெருஞ்சீடர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகழ் வாழ்கவே