இது வரலாற்று சிறப்புமிக்க நாள் அல்லவா

தமிழருவி மணியன் தொடங்கிய காமராஜர் மக்கள் கட்சியும், ஜி.கே. கருப்பையா மூப்பனார் அவர்கள் தொடங்கிய தற்போது அவரது புதல்வர் ஜி.கே. வாசன் அவர்களால் வழிநடப்பட்டு வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற ஒரே அரசியல் கட்சியாக பரிமாணம் அடைந்திருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காந்திய மக்கள் இயக்கத்தையும், பின்னர் காமராஜர் மக்கள் கட்சியையும் வழிநடத்தி வந்த தமிழருவி மணியன் அவர்கள் ஊழல் கறைப்படியா, அப்பழுக்கற்ற உண்மையான காந்தியவாதி என்பதை நாம் அறிவோம். 

தமிழ்மணி அவர்களுக்கும் எனக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது திராவிட இயக்கக் கொள்கைகளில் மனதை தொலைத்த என்னை, அவருடைய பேச்சும் எழுத்தும் ஆன்மீக மற்றும் தேசிய அரசியல்நோக்கி நகர்த்தின. நண்பர்களே அது இத்தகைய தருணம் என்றால் பரந்தாமன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தது போல், புத்தர் சீடர்களுக்கு தம்மத்தைப் போதித்தது போன்ற அனுபவத்துக்கு இணையானது என்றே நான் உணர்கிறேன்.

இத்தகைய மாமனிதர் இன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு அரசியல் முடிவை எடுத்திருக்கிறார் ஒற்றை சிந்தனை கருத்துக்களை மையமாகக் கொண்டு நல்ல அரசியலை விரும்பும் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய காலம் இது என்பதை அறிந்து அந்த மாற்றத்தின் தொடக்கத்தை தமிழருவி மணியன் அவர்கள் இந்த அற்புதமான முன்னெடுப்பின் மூலம் உணர்த்தியுள்ளார். இந்த சிறப்புமிக்க நாளில் அவருக்கும், இந்த இணைப்பை நினைவில் கொள்ளத்தக்க வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாற்றிய அனைவருக்கும், எனது நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே